Breaking

Wednesday, May 25, 2016

நூற்றாண்டின் மனிதன்

வளர்ச்சியின் துவக்கமும்
வீழ்ச்சியின் வேகமும்
விரல் நுணியில் அசையும்
தட்டச்சுகளில் துவங்கும்
தூங்காத நூற்றாண்டில்
நானும் ஒரு மனிதன்.

உறவுகளின் அழைப்பு-இங்கு
தலையனைக்கு கீழே
சத்தமாய் துடிக்கிறது
நோக்கிப் பேசிய கண்கள்
"Nokia" திரைவழியே பேச
எழுந்து நடந்த கால்கள்
"Andriod App"களில்
ஏறி இறங்குகிறது



காமமும் விற்று - வாங்கப்பட
மூடப்பட்ட வீடுகளெல்லாம்
திரைவழியே
திறந்தே கிடக்கிறது
அடுப்பங்கரையில்
வெந்த முகங்கள்
"மசாஜ் சென்டர்களில்"
பதமாக்கபடுகிறது

கடற்கரை காற்றோடு
காதல் துருவாடை
சேர்ந்தே வீசுது
கலாச்சாரத்தை காத்துவந்த
கலைதான் இன்று
கலாச்சரத்தை கற்பழிக்கிது



கெமராக்கள் கொண்டு
மண்டையும், கொண்டையும்
நிறம் மாற்றப்பட்டு
திரைக்குப் பின்னே
பேசியவை தரையில் அரங்கேற்றப்படுகிறது.

காதுகளுக்குள்
ரகசியமாய் இசைக்கப்பட
கண்ணாடி வழியேதான்
திரையரங்குகள் இயங்குகிறது.
தொலைக்காட்சி நிறுவனங்கள்
கண்ணீரை வாங்கி விற்க
பெண்ணின் கண்கள்
அருவியாய் கொட்டுது



பூக்களின் வாசனையும்
இரசாயனம் கொண்டு
நுகரப்பட - இரசாயனம் தான்
நுணி நாக்கில்
சுவைக்கப்படுகிறது
அடங்காத ஒரு மனைவி
கையடக்கமாய்
இன்னோர் மனைவியென்று
குடும்ப வாழ்வு
தொலைந்தே போனது

பெண்மையின்
மேனியும், மார்பும்
விளம்பரமான போது
ஆண்மையின்
முதுகெலும்புகள்
முக்காடு போட்டுக்கொண்டது.



தடையில்லாமல்
தொடைச் சுகம் வேண்டி
ஆணும் - பெண்ணும்
ஆணும் - ஆணும்
பெண்ணும் - பெண்ணுமாக
மெத்தையில்
இடம் மாறிக்கொண்டனர்

கற்பம் வரை
தேடிச் சென்று
விச ஊசிகள்
கொலை செய்கிறது.
அரசியல் வியபாரம்
இலாபத்தை மட்டுமே
ஈட்டித் தருகிறது



"ஐ.நா" என்ற பெயரில்
"ஐ"க்கியம் "நா"சமாக்கப்பட
சமாதானத் தூது
ஏவுகணைகளில் தான்
ஏவப்படுகிறது

தீனிவேண்டி வயிறுகளில்
புழுக்கள் துடிக்கும் போது
"BMW"களின்
"Speed Meter"கள்
வேகம் வேண்டித் துடிக்கிறது.



"Cricket" இல் சுழற்பந்துகள்
"டொலர்களால்" சுழற்றி
வீசப்பட "யூரோக்கள்"
காற்பந்தின்.திசையை
மாற்றுகிறது

நூற்றாண்டின் சிதைவில்
சிதறிப்போன நானும்
பாதி சலவை செய்யப்பட்ட
நூற்றாண்டின் மனிதனே!
விடிவு மனித மண்டைகளில்
துவங்கட்டும்.

♥{ ஜே.எம்.முபாரிஸ் }♥
If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.



Post Top Ad

Your Ad Spot

Pages