இது
பண்டிகைக் காலம். உலகின் பல பாகத்திலும் பலரால் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.
கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு பல Software நிறுவனங்கள் தங்களது மென்பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு
இலவசமாக வழங்குகின்றன.
Monday, December 25, 2017
Saturday, December 23, 2017
கேணிக்கு அருகில் ஒரு தோணி
நீலத் தோனியிலமர்ந்து
நீள்வானைப் பார்த்தேன்
நீண்ட நாட்கள் கடந்தும்
நீங்கா நினைவலைகள்
என் மன நீரோட்டத்தில்
நீந்திக் கொண்டிருக்கின்றன.
ஆடியும் பாடியும்
தேடியும் நண்பர்களுடன்
ஒன்றாய் கூடியும்
ஓடி விளையாடி
திரிந்த காலமது
மஹவான்கடவல குளம்
அது எமதூர் வளம்
மாரியில் நீர் மட்டம் எழும்
கோடையில்- அதிலுள்ள
மீன்கள் அழும்
காலை , மாலை
எப்போதும்
கால, நேரம்
வரையறையின்றி
கூடி விளையாடிய பின்
ஓடிப் போய்
குதித்து விளையாடும்
தண்ணீர் மைதானம்
நீண்டு படர்ந்திருக்கும்
நீர்ப் புதர்களினுள்ளே
நீந்தி விளையாடி
நிதம் நீராடினோம்
மேகம் அழுது
மேய்ப்பர் சோகம்
போக்கி-மானுடர்
மழைத் தாகம்
தீர்க்கும் பொழுது
வேகம் கொண்டு
வெகுண்டெழுமே வெள்ளம்
ஊரைச் சுற்றி..
புழுதியை விரட்டியடிக்கும்
புனல் ஓட்டப்பந்தயத்தில்
வழுவி விளையாடி
சேற்றைத் தழுவிக்கொள்வோம்
நண்பர்களுடன் கூடி
நண்பகல் நேரத்திலும்
நன்றாக நீராடி
நனைந்தோமே இன்ப
மழையினில்...
நீர் வற்றினாலும் கூட
நீங்காது எம் தாகம்
குறைந்த நீரிலும்
குளிர்ச்சி பெற்றோம்
குதித்து விளையாடி
குளித்தபடியே.....
காலங்கள் கடந்த பின்னும்
கரையாத ஞாபகங்கள்
கணப்பொழுது தோன்றினாலும்
கண்ணெதிரே நீரூரும்
♥இ_ரசிகன்♥
நீள்வானைப் பார்த்தேன்
நீண்ட நாட்கள் கடந்தும்
நீங்கா நினைவலைகள்
என் மன நீரோட்டத்தில்
நீந்திக் கொண்டிருக்கின்றன.
ஆடியும் பாடியும்
தேடியும் நண்பர்களுடன்
ஒன்றாய் கூடியும்
ஓடி விளையாடி
திரிந்த காலமது
மஹவான்கடவல குளம்
அது எமதூர் வளம்
மாரியில் நீர் மட்டம் எழும்
கோடையில்- அதிலுள்ள
மீன்கள் அழும்
காலை , மாலை
எப்போதும்
கால, நேரம்
வரையறையின்றி
கூடி விளையாடிய பின்
ஓடிப் போய்
குதித்து விளையாடும்
தண்ணீர் மைதானம்
நீண்டு படர்ந்திருக்கும்
நீர்ப் புதர்களினுள்ளே
நீந்தி விளையாடி
நிதம் நீராடினோம்
மேகம் அழுது
மேய்ப்பர் சோகம்
போக்கி-மானுடர்
மழைத் தாகம்
தீர்க்கும் பொழுது
வேகம் கொண்டு
வெகுண்டெழுமே வெள்ளம்
ஊரைச் சுற்றி..
புழுதியை விரட்டியடிக்கும்
புனல் ஓட்டப்பந்தயத்தில்
வழுவி விளையாடி
சேற்றைத் தழுவிக்கொள்வோம்
நண்பர்களுடன் கூடி
நண்பகல் நேரத்திலும்
நன்றாக நீராடி
நனைந்தோமே இன்ப
மழையினில்...
நீர் வற்றினாலும் கூட
நீங்காது எம் தாகம்
குறைந்த நீரிலும்
குளிர்ச்சி பெற்றோம்
குதித்து விளையாடி
குளித்தபடியே.....
காலங்கள் கடந்த பின்னும்
கரையாத ஞாபகங்கள்
கணப்பொழுது தோன்றினாலும்
கண்ணெதிரே நீரூரும்
♥இ_ரசிகன்♥
Sunday, December 3, 2017
Sunday, November 12, 2017
Mp3 பாடல்களுக்கு உங்கள் படத்தை இணைப்பது எப்படி?
இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யும் MP3 பாடல்கள் அந்தந்த குறிப்பிட்ட தளம் மற்றும் திரைப்படத்தின் படம் இணைக்கப்பட்டிருக்கும். இதனை நாம் ஆடியோவினை கேட்கும் போது படத்தினை காண முடியும். குறிப்பிட்ட ஆடியோ டேக் படத்தினை நாம் விரும்பியவாறு மாற்றியமைத்துக்கொள்ள முடியும்
Wednesday, October 18, 2017
Tuesday, October 10, 2017
Thursday, September 21, 2017
விளம்பரம் செய்யாதே
குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசியபடி, ஆற்றின் கரையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், ‘சட்’டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான்.
Wednesday, September 13, 2017
Kaspersky Anti-Virus மென்பொருளை இலவசமாகப் பயன்படுத்துங்கள்
எமது கணனி வைரஸால் பாதிக்கப்படுவதும் அதனை அகற்ற நாம் எடுக்கும் முயற்சியும் வழமையாகிவிட்டது. ஒரு சந்தர்ப்பத்தில் கணனி வைரஸக் கண்டு நடுங்கி நின்ற இந்த உலகம் அவற்றிட்கு எதிராக செயற்படும் மென்பொருட்களின் ( Anti-Virus ) வருகையால், ஆறுதல் அடைந்திருக்கின்றது எனலாம்.
Friday, July 14, 2017
Facebook தளத்தில் Game Request தொல்லையை உடனே நீக்கிடுங்கள்
உறவினர்கள் நண்பர்களுக்கு இடையில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் எண்ணங்கள், கருத்துக்களை பரிமாற்றிக் கொள்வதற்கும் இன்றைய சமூக வலைத்தளங்கள் உதவுகின்றன. சமூக வலைத்தளம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது Facebook தளமாகத்தான் இருக்க வேண்டும். 1.8 பில்லியன் பயனர்களால் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் இது உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமாகும்.
இந்த தளமானது வெறும் எண்ணங்கள், கருத்துக்கள், புகைப்படங்கள் போன்றவற்றை ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியுடன் மாத்திரம் அதன் பயனர்களை மட்டுப்படுத்தி விடாது பொழுது போக்கிற்காக பல சுவாரஷ்யமான விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்கும் வழி சமைத்துள்ளது.
Friday, June 23, 2017
Friday, June 9, 2017
Photoshop படிக்கலாம் வாங்க
இன்று எம்மில் பெரும்பாலானோர் புகைப்படம் எடுத்தல், அதை அலங்கரித்தல், அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு அதிகமான லைக்குகள் பெறுதல் போன்ற விடயங்களில் அதீத கவனம் செலுத்துகின்றனர். புகைப்பங்களை அழகூட்டி மெரூகூட்டுவதற்கும், நமக்கு தேவையான விதத்தில் வண்ணமயமான படங்களை உருவாக்குவதற்கும் பல மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் , Photoshop மென்பொருளையே பெரும்பான்மையானோர் விரும்பி பயன்படுத்துகின்றனர்.
எமது வலைத்தள வாசகர்களின் வினயமான வேண்டுகோளுக்கிணங்க நாம் எளிய தமிழில் , தெளிவான படவிளக்கத்துடன் Photoshop செயன்முறை நூலொன்றை PDF வடிவில் வடிவமைத்துள்ளோம். Photoshop ல் உள்ள அடிப்படைப் பாடங்களை அறிந்துகொள்வதன் மூலம் நாம் நமது சின்ன சின்ன தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
இந்நூல் Photoshop பற்றி அறியாத புதியவர்களுக்கு விசேடமாக வடிவமைத்துள்ளோம். இந்த வலைப்பதிவில் Adobe Photoshop CS6 மென்பொருளையும் , அதனுடைய License key ஐயும், Photosop Tools பற்றிய நூலையும், எமது ‘Photoshop அடிப்படை பாடங்கள்’ என்ற நூலையும் இணைத்துள்ளோம்.
முதலில் கீழே உள்ள இணைப்பில் சென்று Adobe Photoshop CS6 மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ளுங்கள்.
கீழே உள்ள இணைப்பில் சென்று ‘Photoshop அடிப்படை பாடங்கள்’ PDF நூல் தொகுதியை தரவிறக்கம் செய்யுங்கள்.
தொடர்புடைய பதிவுகள்:
Monday, May 29, 2017
Thursday, May 25, 2017
உங்கள் கணனியில் காணப்படும் Context Menu வில் இதனையும் சேர்க்கலாம்
Windows கணணியை பயான்படுத்தும் நாம் Right செய்து பெறப்படும் சாளரத்தினூடாக ( Context
Menu ) ஏராளமான செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம். அந்தவகையில் புதியதொரு கோப்பினை உருவாக்குவதற்கு, உருவாக்கப்பட்ட கோப்பு ஒன்றினை நீக்குவாதற்கு, கணணியை Refresh செய்வதற்கு, கணனி திரையில் இருக்கக்கூடிய Icon களை ஒழுங்குபடுத்துவதற்கு, ஒரு கோப்பு தொடர்பான முழுத் தகவல்களையும் அறிந்து கொள்வதற்கு என ஏராளமான செயற்பாடுகளை நாம் Right
Context Menu ஊடாக செய்து கொள்கின்றோம்.
Monday, May 15, 2017
Thursday, May 11, 2017
உனக்கும் வரலாம்
ஒரு வீட்டில் ஒரு எலி தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெல்ல தலையை உயர்த்திப் பார்த்தது. வீட்டின் எஜமானனும், எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி. அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப் பார்த்ததும் எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது
"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது." கோழி விட்டேற்றியாகச் சொன்னது " உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை." உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது. மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது.
அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை
"எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா? " என்று நக்கலும் அடித்தது. அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் “டமால்” என்றொரு சத்தம். எலி மாட்டிவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக மாட்டியிருந்த பாம்பு ஒன்று . எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது. பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.
♦நீதி : அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.
♥{ Mohammed Siraj }♥
"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது." கோழி விட்டேற்றியாகச் சொன்னது " உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை." உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதே பதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது. மனம் நொந்த எலி அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது.
அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை
"எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா? " என்று நக்கலும் அடித்தது. அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் “டமால்” என்றொரு சத்தம். எலி மாட்டிவிட்டது என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக மாட்டியிருந்த பாம்பு ஒன்று . எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.
எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது. பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது.
♦நீதி : அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.
♥{ Mohammed Siraj }♥
Wednesday, April 19, 2017
நீ வாருமைய்யா
எங்களால் நெல்
விதைத்த பூமி
நெல் விளைந்த பூமி
வாடியது
நீர் இல்லாமல்
பூமி மட்டும் அல்ல
எங்களது
வயிறும் தான்.....
வாழ வைத்த மண்
வறண்டு போய்
இருக்குதய்யா
நீரில்லாமல் வாடுதய்யா
மண்ணும்
எங்க உயிரும்....
சொட்டுத் தண்ணியின்றி
பச்சைப் பயிர்
தீயுதய்யா
துன்பம் எல்லாம் சேர்ந்து
வந்து கை கொட்டி
சிரிக்குதயா
ஆட்டம் காணுதய்யா
எங்க வாழ்க்கை......
சுற்றி இருந்த
நீரும் வற்றிப்போச்சு
சுற்றி இருந்த
பல உறவும்
செத்துப் போச்சு
எங்கள் சோகக்கதை
கேட்ட காதுகளும்
கெட்டுப் போச்சு........
உலக பசி தீர்த்த
கைகளய்யா
எங்க பசி தீர்க்க
ஒரு நாதியில்லயா?
தண்ணீர் இன்றி
கண்ணீர்வடிக்கிறோம்
கரம் கொண்டு
துயர் துடைக்க யாருமில்லையா?.....
யாரும் இல்லை
என்று இருக்க
மழையே! நீயும்
எங்களை
கைவிட்டதேனோ??
காலம் கடத்தாமல்
வாருமைய்யா
எங்கள் பசி தீர்க்க
மழையே!
நீ வாருமைய்யா....!
♥{ Fathima Hana }♥
விதைத்த பூமி
நெல் விளைந்த பூமி
வாடியது
நீர் இல்லாமல்
பூமி மட்டும் அல்ல
எங்களது
வயிறும் தான்.....
வாழ வைத்த மண்
வறண்டு போய்
இருக்குதய்யா
நீரில்லாமல் வாடுதய்யா
மண்ணும்
எங்க உயிரும்....
சொட்டுத் தண்ணியின்றி
பச்சைப் பயிர்
தீயுதய்யா
துன்பம் எல்லாம் சேர்ந்து
வந்து கை கொட்டி
சிரிக்குதயா
ஆட்டம் காணுதய்யா
எங்க வாழ்க்கை......
சுற்றி இருந்த
நீரும் வற்றிப்போச்சு
சுற்றி இருந்த
பல உறவும்
செத்துப் போச்சு
எங்கள் சோகக்கதை
கேட்ட காதுகளும்
கெட்டுப் போச்சு........
உலக பசி தீர்த்த
கைகளய்யா
எங்க பசி தீர்க்க
ஒரு நாதியில்லயா?
தண்ணீர் இன்றி
கண்ணீர்வடிக்கிறோம்
கரம் கொண்டு
துயர் துடைக்க யாருமில்லையா?.....
யாரும் இல்லை
என்று இருக்க
மழையே! நீயும்
எங்களை
கைவிட்டதேனோ??
காலம் கடத்தாமல்
வாருமைய்யா
எங்கள் பசி தீர்க்க
மழையே!
நீ வாருமைய்யா....!
♥{ Fathima Hana }♥
Friday, April 7, 2017
Android Apps களை Windows கணனிகளில் பயன்படுத்துவது எப்படி?
கணினிகளுக்கான
இயங்குதளங்களுள் WINDOWS இயங்குதளமும் ஸ்மார்ட் போன்களுக்கான இயங்குதளங்களுள் ANDROID இயங்குதளமும் மிகச்சிறந்த இயங்குதளங்கள் ஆகும். எனினும் எமக்குத் தேவையான பல்வேறு கருமங்களை நிறைவேற்றிக் கொள்ள இவற்றுக்கு என தனித்தனியே மென்பொருள்களும்
(Software) செயலிகளும்
(Apps) உள்ளன.
எனவே,
விண்டோஸ் கணினியில் பயன்படுத்தும் ஒரு மென்பொருளை ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலோ ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் பயன்படுத்தும் ஒரு செயலியை விண்டோஸ் இயங்குதளத்திலோ சாதாரணமாக பயன்படுத்திக் கொள்ள முடியாது.
அதற்கு
Android Emulators எனும்
மென்பொருள்கள் நமக்கு உதவுகின்றன. Bluestacks,Andy, KoPlayer,Memu போன்றவற்றை அம்மென்பொருள்களுக்கு
உதாரணமாக கூறலாம். இன்று நாம் பார்க்கவிருக்கும் மென்பொருளின் பெயர் Memu. Memu
மூலம் ஆண்ட்ராய்டு செயலிகளை விண்டோஸ் இயங்குதளத்தில் பயன்படுத்தலாம்.
Memu
மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுவதன் மூலம் நாம் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் நிறுவும் செயலிகளை விண்டோஸ் இயங்குதளத்திலும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
பல
மில்லியன் கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்களால் பயன்படுத்தப்படும் இந்த மென்பொருள் மூலம் கூகுள் ப்ளே ஸ்டோரில் (Playstore) இருக்கும் எந்த ஒரு செயலியையும் உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.
கணினியை
பயன்படுத்தும் எந்த ஒருவராலும் இந்த மென்பொருளை மிக இலகுவாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
Memu
மென்பொருளை கணினியில் நிறுவுவது எப்படி?
கீழே
குறிப்பிட்டுள்ள இணைப்பிலுள்ள இணையதளத்தில்
இருந்து இந்த மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிய பின் குறிப்பிட்ட மென்பொருளை திறந்து கொள்க.
இனி
அதன் பிரதான இடைமுகத்தில் வெவ்வேறுபட்ட ஆண்ட்ராய்டு செயலிகள் தரப்பட்டிருக்கும் அவற்றை நீங்கள் உங்கள் கணினியில் நிறுவ விரும்பினால் அவற்றை சுட்டும்போது தோன்றும் கூகுள் ப்ளே ஸ்டோர் இடைமுகத்தில் INSTALL என்பதை சுட்ட வேண்டும். இனி குறிப்பிட்ட செயலியை Memu மூலமாக உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்தலாம்.
கூகுள்
ப்ளே ஸ்டோரில் இருந்து செயலிகளை தரவிறக்க உங்கள் ஜிமெயில் கணக்கை பயன்படுத்த வேண்டும். மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் தோன்றும் Search Button மூலம் எந்த ஒரு செயலியையும் தேடிப்பெற்று அதனை நிறுவிக்கொள்ள முடியும்.
Memu வின் வலது பக்கத்தில் பயனுள்ள
Option பலவற்றை எம்மால் காண முடியும்
சிறப்பம்சங்கள்:
*Android
செயலிகளை(apps) இலகுவாக பயன்படுத்தலாம்
*ROOT
வசதியும் வழங்கப்பட்டுள்ளது
*Screenshot,
Screen record செய்து கொள்ள முடியும்
*நாம்
விரும்பிய புகைப்படத்தை பின்புலப்படமாக வைத்துக்கொள்ள முடியும்
*Game
Tools களை பயன்படுத்த முடியும்
*கைப்பேசியை
கணனியுடன் இணைத்து Files Share பண்ண முடியும்
*கணனியுள்ள
apk கோப்புக்களை இலகுவாக INSTALL செய்யலாம்
மென்பொருளின் செயன்முறை பற்றிய PDF
கைநூலை ( User Manual ) கீழே உள்ள இணைப்பில் சென்று தரவிறக்கம் செய்யுங்கள்
குறிப்பு:
மேலே
வழங்கப்பட்டிருக்கும் இணைப்புகளை செய்து , 5 செக்கன்கள் காத்திருந்து SKIP AD என்பதை
Click செய்தால் உரிய வலைப்பக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
Thursday, March 30, 2017
Saturday, January 21, 2017
Volume Button மூலம் என்ன செய்யலாம்?
எமது Android சாதனத்தில் தரப்பட்டுள்ள Volume button ஆனது Android சாதனத்தில் இருந்து வெளிப்படக் கூடிய ஒலியின் (சத்தம்) அளவை கூட்டிக் குறைப்பதற்காகவே தரப்பட்டுள்ளது. அதுவே நாம் அறிந்த விடயம் , எனினும் அதன் மூலம் எமக்குத் தேவையான ஏனைய வசதிகளையும் செயற்படுத்தலாம்.
Quick Click எனும் Android சாதனத்துக்கான செயலியானது Volume Button மூலம் பல பயனுள்ள வசதிகளை பெற்றுக் கொள்ள வழிவகுக்கின்றது. இந்த செயலியின் உதவியுடன் உங்கள் Android சாதனத்தில் இருக்கக் கூடிய Volume Button களை பயன்படுத்தி
*புகைப்படங்கள் எடுத்தல், (
Photo )
*வீடியோ கோப்புக்களை பதிவு செய்தல் ( Video )
*Flash light ஐ ஒளிரச்செய்தல்
*குரல் பதிவுகளை மேற்கொள்ளல் ( Dictaphone l
*குறுஞ்செய்திகளை அனுப்புதல் ( Message )
*அழைப்புக்களை ஏற்படுத்தல் ( Call )
*எந்த ஒரு செயலியையும் திறந்து கொள்ளல்
போன்ற ஏராளமான செயற்பாடுகளை செய்து கொள்ள முடியும்.
கீழுள்ள இணைப்பில் Quick Click செயலியை Download செய்து கொள்ளுங்கள்
Quick Click செயலியை எவ்வாறு பயன்படுத்துவது?
இந்த செயலியை தரவிறக்கி Install செய்து திறந்து கொண்ட பின் Volume Button மூலம் எவ்வாறான செயற்பாட்டை செய்ய விரும்புகிறீர்களோ அதனை தெரிவு செய்ய வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் Volume Button மூலம் புகைப்படங்களை எடுக்க விரும்பினால் Photo என்பதை தெரிவு செய்ய வேண்டும். பின்னர் தோன்றும் அடுத்த பகுதியின் மூலம் குறிப்பிட்ட செயற்பாடு தொடர்பான மேலதிக வசதிகளை தெரிவு செய்து Ready என்பதை சுட்ட வேண்டும்.
உதாரணத்தின் படி நீங்கள் Photo என்பதை தெரிவு செய்திருந்தால், குறிப்பிட்ட புகைப்படம் பிடிக்கப்பட வேண்டிய கேமரா எது? (Back Or Front) அந்த புகைப்படத்தின் தரம் எவ்வாறு இருக்க வேண்டும்? (High, Medium, Low), புகைப்படம் பிடிக்கப்படும் போது Flash மற்றும் Auto-focus வசதி செயற்படுத்தப் பட வேண்டுமா? புகைப்படம் சேமிக்கப்பட வேண்டிய இடம் எது? புகைப்படம் பிடிக்கப்பட்ட பின் குறிப்பிட்ட புகைப்படம் திறக்கப்பட வேண்டுமா? அல்லது Gallery திறக்கப்பட வேண்டுமா? என்பவைகள் தொடர்பான அமைப்புக்களை தெரிவு செய்ய வேண்டும். அடுத்து தோன்றும் சாளரத்தில் Volume Button அழுத்தப்படும் முறையை தெரிவு செய்ய வேண்டும்.
உதாரணத்திற்கு அந்த சாளரத்தில் தரப்பட்டுள்ள ஒன்றன் பின் ஒன்றான கட்டங்களில் முதல் கட்டத்தில் ஒன்றை "+" ஆகவும் அதற்குக் கீழ் தரப்பட்டுள்ள இரண்டாவது கட்டத்தில் "-" என்பதையும் நீங்கள் தெரிவு செய்திருந்தால் குறிப்பிட்ட செயற்பாடானது Volume Button ஐ மேல் ஒரு முறை அழுத்தி விட்டு கீழ் ஒரு முறை அழுத்தும்போ து குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெரும். (உதாரணத்தின் படி புகைப்படம் பிடிக்கப்படும்)
இதனடிப்படையில் வெவ்வேறுசெயற்பாடுகளுக்கும் வெவ்வேறான படிமுறைகளை அமைத்துக்கொள்ளலாம். இறுதியாக குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெரும் போது Vibrate அல்லது சத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனின் அதனை தெரிவு செய்த பின் Finish என்பதை அழுத்த வேண்டும்.
அவ்வளவு தான். இனி நீங்கள் இட்ட கட்டளைக்கு ஏற்ப Volume Button ஐ அழுத்தும் போது குறிப்பிட்ட செயற்பாடு இடம்பெறும்.
தொடர்புடைய இணைப்புக்கள்: