Breaking

Saturday, April 25, 2015

உங்கள் கணனியில் Beep ஒலி வர காரணம் என்ன?

கணனியில் ஒலிக்கும் Beep ஒலி பலருக்கும் புரியாத ஒன்றாகவே இருந்து வருகிறது.

இதன் பயன்பாடானது, கணனியில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும். கணனியை ஆன் செய்தவுடன் bios ஆனது booting ஆகும் நேரத்தில் ஹார்டுவேர் பாகங்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என சோதிக்கும். அப்படி ஏதாவது ஒரு சில பாகங்கள் சரியில்லை என்றால் உடனே கணினியில் இருந்து பீப் ஒலி ஒலிக்க தொடங்கும்.


அப்படி ஒலிக்கும் ஒலியின் எண்ணிக்கையை வைத்தே நாம் எதில் சிக்கல் இருக்கிறது என கண்டறியலாம்.



* 1- 2 - 3 முறை பீப் சத்தம்:
ram அல்லது motherboard ல் பிரச்சனைகள் இருப்பதைக் குறிக்கும்



* 4 முறை பீப் சத்தம்:
Timer ல் தோன்றும் பிரச்சனையை சரி செய்யும் விதமாக ஒலிக்கும்.



* 5 முறை பீப் சத்தம்:
Processer ல் சிக்கல் இருப்பதைக் குறிக்கும்.




* 6 முறை பீப் சத்தம்:
Keyboard, Keyboard Controlல் தோன்றும் சிக்கலை குறிக்கும் விதமாக ஒலிக்கும்.



* 7 முறை பீப் சத்தம்:
motherboard இல் உள்ள Jumpers சரியாக உள்ளாதா, இல்லை சரியாக வேளை செய்கிறதா என்பதை உணர்த்தும் விதமாக ஒலிக்கும்.



* 8 முறை பீப் சத்தம்:
Display சமந்தமான பிரச்சனைகளை குறிக்கும் விதமாக அமையும்.



* 11 முறை பீப் சத்தம்:
Cach Memory சமந்தமான சிக்கல்கள் இந்த பீப் சத்ததின் மூலம் தெரிவிக்கப்படும்.



* 1 தொடர் பீப், மற்றும் 3 குறுகிய பீப்:
Memory தொடர்பான பிரச்சனைகள் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.



* 1 தொடர் பீப், மற்றும் 8 குறுகிய பீப்:
Display இல் தோன்றும் பிரச்சனைகள் இந்த பீப் சத்ததின் மூலம் அறிந்து கொள்ளலாம்.



* 1 முறை குறுகிய பீப் சத்தம்:
சாதாரணமான ஒலி மற்றும் உங்கள் கணனி நல்ல விதமாக வேளை செய்வதை குறிக்கும்.



* தொடர் மற்றும் குறுகிய பீப் சத்தம்:
கணனி மிகுந்த சிக்கலில் இருப்பதை குறிக்கும்.



* 1 தொடர் மற்றும் 1 குறுகிய பீப் சத்தம்:
Motherboard-ல் பிரச்சனை இருப்பதைக் குறிக்கும்.



* 1 தொடர் மற்றும் 2 குறுகிய பீப் சத்தம்:
Videoவில் தோன்றும் பிரச்சனைகளை குறிக்கும்



* 3 முறை தொடர் பீப் சத்தம்:
Video circuit-ல் உள்ள சிக்கலை குறிக்கும் வண்ணம் ஒலிக்கும்.



இப்போது கணனியில் ஒலிக்கும் பீப் சத்ததை வைத்தே 
உங்கள் கணனியில் உள்ள குறைபாடுகளை நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

www.ariwahem.blogspot.com








Post Top Ad

Your Ad Spot

Pages