Breaking

Sunday, February 28, 2016

காத்திரு காதலி

காதலி
காதலியை அல்ல
மனைவியை..
மனைவியை
காதலி
மனைவியாய் அல்ல
காதலியாய்..

கட்டிக்க முன்னே
கட்டிக் கொள்கிறாய்
கேட்டால்,
காதல் என்கிறாய்..
முடிக்க முன்னே
முந்திக் கொள்கிறாய்..
கேட்டால்,
முதலிரவுக்கு ஒத்திகை
என்கிறாய்..

கண்டவளை எல்லாம்
காதல் செய்கிறாய்..
உனக்காகக் காத்திருப்பவளுக்கோ
துரோகம் செய்கிறாய்..
கவலைப் படாதே
உனக்கான பூக்கள்
நீ பறிக்கும் வரை
உதிர்வதே இல்லை..

காத்திரு
காதல் செய்யலாம்..
உன் விலா எலும்பின்
விலாசம் கொண்டவளை..
காத்திரு
காதல் செய்யலாம்..
உனதான உணர்வுகளின்
உடைமைக்காரியை....

காத்திரு
காதல் செய்யலாம்...

♥{ கதுருவெல ஆஷிப் }♥

Post Top Ad

Your Ad Spot

Pages