Breaking

Wednesday, June 8, 2016

அன்பை கொடுங்கள்

ஒரு பாடசாலையில் "அன்பை வெளிப்படுத்தும் எதையும் கொண்டு வாருங்கள்" என்று நான்கு மாணவிகளை அனுப்பினார் ஆசிரியை. 


சிறிது நேரத்தில் ஒரு மாணவியின் கைகளில் மலர் இருந்தது.
இன்னொரு மாணவியிடம் வண்ணத்துப் பூச்சி இருந்தது. 
மற்றொரு மாணவியிடம் ஒரு குஞ்சுப்பறவை இருந்தது. 
முதலில் வெளியே கிளம்பிப்போன மாணவியோ கடைசியில் வெறுங்கையோடு வந்தாள். 


கேட்டபோது சொன்னாள் “நானும் மலரைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. செடியிலேயே இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன். வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தேன். அழகாய் இருந்தது. சுதந்திரமாய்ப் பறக்கட்டும் என்று விட்டுவிட்டேன் குஞ்சுப் பறவையைப் பார்த்தேன். தாய்ப்பறவை தேடுமென்று விட்டுவிட்டேன்” 

அந்த மாணவியை அணைத்துக் கொண்ட ஆசிரியை சொன்னார் “அன்பு என்றால் இதுதான்”.


உங்களால் உலகிற்கு எதையேனும் இலவசமாகக்கொ டுக்க முடியும் என்று நினைத்தால் அன்பைக் கொடுங்கள்... ஏனெனில் உலகம் அதற்குத்தான் அதிகமாக ஏங்கிக் கிடக்கின்றது.

♥{ Fazrin Faleel }♥


தொடர்புடைய இணைப்புக்கள்:




If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.



Post Top Ad

Your Ad Spot

Pages