Breaking

Sunday, June 19, 2016

Whatsapp ல் காணப்படாத Viber வழங்கும் அட்டகாசமான புதிய வசதிகள்


 உறவினர்கள் நண்பர்களுக்கு அழைப்புக்களை மேற்கொள்வதற்கும் அரட்டை அடிப்பதற்கும் என பயன்படுத்தப்பட்டுவரும் மெசேஜிங் சேவைகளுள் வைபர் சேவையும் பிரபலமான ஒன்றாகும். வைபர் சேவையில் அடிக்கடி பல அட்டகாசமான வசதிகள் ஏற்படுத்தப்படுவதுண்டு. அந்த வகையில் அதன் புதிய பதிப்பில் வாட்ஸ்அப் சேவையில் இதுவரை வழங்கப்படாத வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது


அத்துடன் இதன் புதிய பதிப்பு மூலம் வைபர் மெசெஞ்சரில் இருக்கும் செய்திகளையும் Backup செய்துகொள்ள முடியும். வைபர் டெலிகிராம் உள்ளிட்ட மேலும் பல பிரபலமான மெசேஜிங் சேவைகள் மூலம் இவ்வாறான அனிமேஷன் புகைப்படங்களை பகிர்ந்துகொள்ள முடிந்தாலும் வாட்ஸ்அப் சேவையில் இந்த வசதி இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைபர் சேவையின் புதிய வசதிகள் :

*அனிமேசன் (அசையும்) படங்களை அனுப்பும் வசதி
வைபர் சேவையின் புதிய பதிப்பானது அனிமேஷன் புகைப்படங்களையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள வழிவகுத்துள்ளதுஅதாவது .gif  file extension ஐ கொண்ட  அசையக்கூடிய அழகான படங்களை வைபரில் பகிர்ந்து கொள்ளலாம்.



*வைபர் மெசெஞ்சர் மூலம் எமக்கு வரக்கூடிய செய்திகளை கூகுள் டிரைவ் சேமிப்பகத்தில் சேமித்துக் கொள்ளவும் தேவைப்படும்போது அவற்றை மீண்டும் வைபர் செயலிக்கு பெற்றுக் கொள்ளவும் வசதி  தரப்பட்டுள்ளது. இதன் மூலம் வைபர் மெசெஞ்சரில் உள்ள ஒரு செய்தியை நீங்கள் தவறுதலாக நீக்கியிருந்தாலும் கூட அதனை மீண்டும்பெற்றுக்கொள்ளலாம். எனினும் இந்த வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ள வைபர் செயலியில் புதிய பதிப்பை நிறுவியிருக்க வேண்டும்.

இதன் புதிய பதிப்பை நிறுவிய பின்னர் வைபர் செயலியின் இடது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள மெனு பட்டனை அழுதுத்தும் போது பெறப்படும் சாளரத்தில் Settings > Viber Backup என்பதை click செய்ய வேண்டும். இனி பெறப்படும் சாளரத்தில் உள்ள Settings என்பதை click செய்வதன் மூலம் உங்களின் கூகுள் கணக்குடன் வைபர் கணக்கை இணைக்க முடியும். அவ்வாறு இணைக்கப்பட்டதன் பின்னர் Backup என்பதை click செய்வதன் மூலம் உங்கள் வைபர் தகவல்களை கூகுள் டிரைவ் சேமிப்பகத்துக்கு தரவேற்றிக் கொள்ளலாம்.




நீங்கள் வைபர் செயலியை நீக்கிவிட்டு அதை மீண்டும் நிறுவும் போதோ அல்லது புதியதொரு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போதோ நீங்கள் ஏற்கனவே இழந்த வைபர் தகவல்களை இந்த வசதி மூலம் மீள பெற்றுக்கொள்ளலாம். மீள பெற்றுக்கொள்வதற்கு, மேற்குறிப்பிட்ட முறையில் நீங்கள் Backup செய்த பின்னர் Settings > Viber Backup பகுதிக்கு சென்று Restore என்பதை சுட்டுவதன் மூலம் இழந்த வைபர் தகவல்களை மீள பெற்றுக்கொள்ளலாம்.



* வைபரில் அனுப்பிய செய்தியை நண்பரின் ஸ்மார்ட்போனிலிருந்தும் அழித்துக்கொள்வதற்கான வசதி

வைபரில் அழிக்க வேண்டிய செய்தியை சிறிது அழுத்தும் போது தோன்றும் சாளரத்தில் Delete For Myself என்பதன் மூலம் நாம் அனுப்பிய தகவல்களை எமது போனில் இருந்து மாத்திரம் நீக்க முடிவதுடன் Delete For Everyone என்பதன் மூலம் அந்த தகவலை நண்பரின் போனில் இருந்தும் எம்மால் நீக்க முடியும். மேற்குறிப்பிட்ட முறைகளில் முதலாவது குறிப்பிட்ட முறையில் (Delete For Myself) நீக்கிய தகவல்கள் மாத்திரமே வைபர் செயலிக்கு மீள உள்வாங்கப்படும்



*வைபர் சேவை மூலம் நீங்கள் ஏனையவர்களுடன் மேற்கொள்ளும் அரட்டையை (Chat) மறைப்பதற்கான வசதி.

மேலதிகமாக அவற்றுக்கு கடவுச்சொல் இட்டுக்கொள்ளவும் முடியும். அரட்டையை மறைப்பது எப்படி?

நீங்களும் இந்த வசதியை பெற விரும்பினால் அரட்டையை மறைக்க வேண்டிய நபரின் அரட்டைக்கான பகுதிக்குச் (Chat Window) சென்று அதன் வலது மேல் மூலையில் வழங்கப்பட்டுள்ள அமைப்புகளுக்கான குறியீட்டை click செய்யுங்கள் (Setting Icon) இனி அதன் கீழ் பகுதியில் வழங்கப்பட்டுள்ள Hide Chat என்பதை தெரிவு செய்யுங்கள். பின்னர் தோன்றும் சாளரத்தில் உங்களால் இலகுவில் ஞாபகப்படுத்திக்கொள்ள முடியுமான ஒரு கடவுச்சொல்லை (password) கொடுங்கள்அவ்வளவு தான் இனி குறிப்பிட்ட நபருடன் நாம் மேற்கொண்ட உரையாடல்கள் அனைத்தும் மறைக்கப்பட்டுவிடும். (இது வைபர் சேவையில் உள்ள ஒரு குழுவுக்கும் பொருந்தும்)



மறைக்கப்பட்ட அரட்டையை திரும்பப்பெறுவது எப்படி?

மறைக்கப்பட்ட அரட்டையை திரும்பப்பெற வைபர் செயலியில் ஒரு இரகசியமான முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது வைபர் செயலியின் Chat எனும் சாளரத்தின் வலது மேற்பகுதியில் தரப்பட்டுள்ள Search என்பதில் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். இனி மறைக்கப்பட்ட நபரின் அரட்டை தோன்றுவதை அவதானிக்கலாம்.



*இன்றே உங்கள் வைபர் செயலியை UPDATE செய்து கொள்ளுங்கள்.*


தொடர்புடைய இணைப்புக்கள்:




*குறிப்பு :
மேலே வழங்கப்பட்டுள்ள அனைத்து LINK களையும் Click செய்தவுடன் விளம்பரமொன்று காண்பிக்கப்படும் 5 செக்கன்கள் காத்த்திருந்து SKIP AD என்பதை Click செய்தால் உரிய வலைப் பக்கத்தை பெற்றுக் கொள்ளலாம்






Facebook ல் எங்களது  Ariwaham-அறிவகம் பக்கத்தை Like செய்து பல சுவாரசியமான தொழிநுட்ப தகவல்களை உடனுக்குடன் பெற்றிடுங்கள்


*இது பற்றிய காணொளிக் காட்சி (Video)


If You Enjoyed This Post Please Take 5 Seconds To Share It.


Post Top Ad

Your Ad Spot

Pages