Breaking

Thursday, December 4, 2014

காணாமல் போகும் பறவை - Cagou

ககோவ்”(CAGOU) என்ற பறவை காணாமல் போகும் பறவை என்றும் அழைக்கப்படுகிறது. காரணம் இது பெர்முடா தீவுகளில் மட்டும் காணப்படுகிறது. இந்தப் பறவை இயற்கை ஆய்வாளர்களுடன் கடந்த 300 ஆண்டுகளாக `கண்ணாமூச்சி' விளையாடி வந்திருக்கிறது. இந்தப் பறவை இனம் முற்றிலுமாக அழிந்துவிட்டது என்று நினைக்கப்படும் போதெல்லாம் சில பறவைகள் கண்ணில் தென்படும்.




ஒரு காலத்தில் பெர்முடா தீவுகளில் மிக அதிகமாகக்காணப்பட்ட இப் பறவைகள், இங்கு குடியேறிய ஆங்கிலேயர்களுக்கு நல்ல உணவாகின. குறிப்பாக 17-ம் நூற்றாண்டில் இடையிடையே கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்ட போது `ககோவ்'  பறவையே முக்கிய உணவானது. அப்புறம் அப்பறவைகள் கண்ணில் படாமல் போக, அவை முற்றிலுமாக அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட நிலையில் 1916-ம் ஆண்டு மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டன. சில ஆண்டுகள் கழித்து மறுபடி காணாமல் போன அவை 1951-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டன. அப்போது ஒரு தீவுத் திட்டில் 18 ஜோடிகள் மட்டும் இருந்தன.




அடுத்து, பெர்முடாவின் வனக் கட்டுப்பாட்டு அலுவலர் டேவிட்விங்கேட் ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினார். பெர்முடா தீவுக்கு வரும் வெப்ப மண்டலப் பறவைகள் `ககோவ்'  பறவைகளை அழித்து அவற்றின் கூடுகளை ஆக்கிரமிப்பதை அவர் அறிந்தார். எனவே  `ககோவ்' பறவைகளின் கூடுகளை பெரிய வெப்பமண்டலப் பறவைகள் நெருங்காமல் தடைகளை ஏற்படுத்தினார்.
அதன்விளைவாக, மகிழ்ச்சி அளிக்கும் வகையில் `ககோவ்'  பறவைகளின் எண்ணிக்கை 126 ஜோடிகளாக அதிகரித்துள்ளது.


நீர் Cagu பறவையை கண்டுள்ளீரா?




Post Top Ad

Your Ad Spot

Pages