Breaking

Saturday, September 19, 2015

தன்னம்பிக்கையின் தத்ரூபங்கள் - Sense of Self confidence

யார் இவர்கள் ??

பார்வை இல்லாமல்
பாராட்டை பெற்றவர்கள்
செவிப்புலனில்லாமல்
செவியேற்க வைத்தவர்கள்
கைகளில்லாமல்
கை தட்ட வைத்தவர்கள்
பேச்சில்லாமல் பிறரை
பேச வைத்தவர்கள்
பாதங்களில்லாமல்
பாரை ஜெயித்தவர்கள்
உறுப்புகளில்லாமல்
உயர்ந்தவர்கள்
ஊனத்தால் பிறருக்கு
ஞானம் புகட்டியவர்கள்

கையிருந்தும் காலிருந்தும்
உழைத்து வாழ தெம்பிருந்தும்
உதவாக்கரை பேரெடுத்து
உறங்கிக் கிடப்போரை
நாம் யாரும் கேலி செய்வதில்லை

பாதையிலே பாதமின்றி
படம் வரயைும் ஓவியனைப்
பார்த்து
சப்பாணி பையன்
சாப்பட்டுக்கு பிச்சை
எடுக்கிறான் என
பரிகசிக்கிறோம்

பண நோட்டுக்களில் ஓட்டை, கிழிசல், அழுக்கு போன்ற குறைகள் இருந்தாலும் யாரும் அதை வேண்டாம் என ஒதுக்குவதில்லை

நம் கூட பிறந்த சகோதரன் கூனோடு பிறந்து விட்டால் வீணாய் போனவன் என்று விதண்டா வாதம் பேசுகிறோம்

நம் சரீரம் சீராக இருந்தும்
சாதனை செய்ய
சிந்திக்காது பொய்
சாட்டுக்கள் கூறியே
காலங்களையும் நேரங்களையும்
சாப்பிட்டு
செத்து மடிகின்றோம்

குறைியிருந்தும் தம்
மனதில்
தன்னம்பிக்கை
நிறையுண்டு என்பதை
நிரூபித்து இவர்கள்
சாதித்து காட்டுகின்றனர்

இதன் மூலம் இவர்கள் தன்னம்பிக்கையின் தனித்துவ சின்னங்களாய் மிளிர்கின்றனர்

♦ இவர்கள் இயலாதவர்கள் அல்ல, இயலாமையை மாற்றியமைக்கும் திறமைசாலிகள் ,
"மாற்றுத் திறனாளிகள்" ♦

"ஊனம் என்பது உடம்பிலுள்ளதல்ல, மனதிலுள்ளதே!!" என்பதை உறுதியாய் பறைசாற்றும் உத்தம ஹீரோக்கள் இவர்கள்

இவர்களை பாருங்கள்
இதயத்தை தொடுங்கள்
இடைவிடாது சிந்தியுங்கள்
இப்போது கூறுங்கள்

உண்மையில் ஊனமுற்றோர் யார்?

"இவர்களா ?? "

"நாமா ?!!!"






















"உள்ளம் நல்லா இருந்தா
ஊனம் ஒரு குறையுமில்ல 
உள்ளம் ஊனப்பட்டால் 
உடம்பிருந்தும் பயனுமில்ல" 

*ஊனம் என்னடா ஊனம்
ஞானம் தானே வேணும்
ஞானம் வர வேணும்னா
நம்ம மனசு மாற வேணும்*



www.ariwahem.blogspot.com

Post Top Ad

Your Ad Spot

Pages